மகளிர் ஆசிய ஹாக்கி | கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – 2வது பாடலின் அப்டேட் வெளியீடு!
இந்நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, பீகார் அரசும் இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி,வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.