இந்தியா -வங்கதேசம் இடையேயான 2ம் நாள் டெஸ்ட் போட்டி | #Ticket விற்பனை தொடக்கம்!
இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டாம் நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சூழலில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று(செப்டம்பர்-19ம் தேதி) தொடங்கியது. அதன்படி, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதின.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 5,000 கி.மீ தொலைவில் நோயாளி… அறுவை சிகிச்சை மூலம் #lungTumor அகற்றி மருத்துவர் சாதனை – எங்கு தெரியுமா?
இந்நிலையில், இந்தியா வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கவும் என தெரிவித்தனர். அதன்படி, இந்தியா வங்காளதேசம் இடையேயான இரண்டாம் நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.