Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜார்க்கண்டில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி... ஹாட்ரிக் வெற்றிப் பெறும் ஹேமந்த் சோரன்!

11:28 AM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி திடீர் திருப்பமாக முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 41 இடங்கள் தேவை. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்ததது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுக்களில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலை 11 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 50 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 29 தொகுதிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவில் உள்ளது.

Advertisement
Next Article