Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:06 AM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

 இன்று நடைபெறும் INDIA  கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். 

Advertisement

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.  மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான INDIA கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் INDIA கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இக்கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி,  ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? - உண்மை என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கின்றனர்.  INDIA கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவும்,  அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறோமா? என்பதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

Tags :
DMKElectionsResultsElectionsResults2024India AllainceLoksabhaElecetionLokSabhaElections2024MKStalinResultsWithNews7TamilTamilNadu
Advertisement
Next Article