#IndependenceDay | ‘தங்கலான்’ முதல் ‘டிமாண்டி காலனி 2’ வரை... - திரையரங்குகளில் வெளியான படங்கள்!
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் தமிழ் திரைப்படங்கள் குறித்து காணலாம்.
78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் இன்றைய நாளில் புதிய திரைப்படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வெளியான திரைப்படங்களை இங்கு காணலாம்.
தங்கலான்:
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
ரகு தாத்தா:
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டது. இந்த படத்தை ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
டிமாண்டி காலனி 2:
நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.
அருள்நிதி தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த 3 திரைப்படங்களும் இன்று சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.