Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுதந்திரதின விழா - 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:03 AM Aug 15, 2025 IST | Web Editor
மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisement

அதில், "விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்வு; தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11ஆயிரமாக உயர்வு,

2ஆம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்வு,

2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்வு,

சென்னை மாதவரத்தில் 33ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும்,

மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்,

ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் கல்லூரி பயிலும் நவீன தொழில்நுட்பங்களில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CelebrationsCHIEF MINISTERIndependence DayM.K. Stalinnationalflag
Advertisement
Next Article