Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsNZ | பெங்களூருவில் இடைவிடாது மழை... இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம்!

01:19 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டாஸ் காலையில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவமழை காரணமாக பெய்த கடுமையான மழையால் டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. பெங்களூரு மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் இன்று மற்றும் நாளை மிக அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, வார இறுதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலகிலேயே சிறந்த மழைநீர் வடிகால் உள்ளது. அதனால் மழை குறைந்தால் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags :
BengaluruCricketIND vs NZIndiaNew Zealandnews7 tamilNZ vs INDSportsTest Cricket
Advertisement
Next Article