Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

10:19 AM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால்  காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 58 ஆயிரம் கனஅடி நீா்வரத்து காணப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 110 அடியை நெருங்கியது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நீா் வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டினால் உபரிநீா் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (29.07.2024) காலை 8.00 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AlertCauveryFloodKarnatakaMettur damMonsoonRain
Advertisement
Next Article