கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு…!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் நேற்றைய விலையை விட 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும், நீர் பற்றாக்குறை, கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும். அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு, வரலாறு காணாத வெயில் அடித்த நிலையிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் நேற்றைய விலையை விட 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பூண்டு மற்றும் பீன்ஸ் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பீன்ஸ் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிலோ பூண்டு 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய விலை நிலவரப்படி,
வெங்காயம் ரூ.30-க்கும்,
தக்காளி ரூ.25-க்கும்,
நவீன தக்காளி ரூ.40-க்கும்,
உருளை ரூ.35-க்கும்,
சின்ன வெங்காயம் ரூ.60-க்கும்,
ஊட்டி கேரட் ரூ.60-க்கும்,
பெங்களூர் கேரட் ரூ.25-க்கும்,
பீன்ஸ் ரூ.250-க்கும்,
ஊட்டி பீட்ரூட் ரூ.50-க்கும்,
கர்நாடக பீட்ரூட் ரூ.30-க்கும்,
சௌ சௌ ரூ.50-க்கும்,
முள்ளங்கி ரூ.30-க்கும்,
முட்டை கோஸ் ரூ.25-க்கும்,
வெண்டைக்காய் ரூ.40-க்கும்,
உஜாலா கத்திரிக்காய் ரூ.60-க்கும்,
வரி கத்திரி ரூ.55-க்கும்,
காராமணி ரூ.70-க்கும்,
பாவக்காய் ரூ.50-க்கும்,
புடலங்காய் ரூ.65-க்கும்,
சுரக்காய் ரூ.35-க்கும்,
சேனைக்கிழங்கி ரூ.75-க்கும்,
முருங்கக்காய் ரூ.60-க்கும்,
சேமகிழங்கு ரூ.40-க்கும்,
காலிபிளவர் ரூ.30-க்கும்,
வெள்ளரிக்காய் ரூ.40-க்கும்,
பச்சை மிளகாய் ரூ.80-க்கும்,
பட்டாணி ரூ.200-க்கும்,
இஞ்சி ரூ.140-க்கும்,
பூண்டு ரூ.350-க்கும்,
அவரைக்காய் ரூ.80-க்கும்,
மஞ்சள் பூசணி ரூ.20-க்கும்,
வெள்ளை பூசனி ரூ.15-க்கும்,
பீர்க்கங்காய் ரூ.70-க்கும்,
எலுமிச்சை ரூ.130-க்கும்,
நூக்கள் ரூ.35-க்கும்,
கோவைக்காய் ரூ.30-க்கும்,
கொத்தவரங்காய் ரூ.30-க்கும்,
வாழைக்காய் ரூ.7-க்கும்,
வாழைதண்டு ரூ.35-க்கும்,
வாழைப்பூ ரூ.30-க்கும்,
குடைமிளகாய் ரூ.60-க்கும்,
வண்ண குடமிளகாய் ரூ.190-க்கும்,
கொத்தமல்லி ரூ.7-க்கும்,
புதினா ரூ.4-க்கும்,
கருவேப்பிலை ரூ.20-க்கும்,
கீரை வகைகள் ரூ.10-க்கும்,
மாங்காய் ரூ.40-க்கும்,
தேங்காய் ரூ.33-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.