Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு... #UnionGovt அறிவிப்பு!

10:07 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,358 பகுதி திறன் உள்ளவர்களுக்கு ரூ.868 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 22,568 திறன் உடையவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.954, திறன்மிகுதி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1035 மாதத்திற்கு ரூ. 26,910 ஆக ஊதியம் வகுக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், சுமைகளை ஏற்றி இறக்குதல், தூய்மைப் பணி, சுரங்கம் உள்ளிட்ட பலதுறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார். தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அக். 1 முதல் அமலுக்கு வரும்."

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Central GovtMinimum Wage Ratesnews7 tamilsalary hikeWorkers
Advertisement
Next Article