Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வருமான வரி தாக்கல் - கடந்த ஆண்டை விட 7.5% அதிகம்!

10:06 AM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.50 சதவீதம் அதிகரித்து, 7.28 கோடிக்கும் அதிகமாக தாக்கலாகி உள்ளது. 

Advertisement

2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை 7.28 கோடி வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது, ஒரு புதிய உச்சம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தாக்கலான 6.77 கோடியை காட்டிலும், 7.50 சதவீதம் கூடுதலாகும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி நாளில் அதிகபட்சமாக 69.92 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல் முதன்முறையாக வரி செலுத்துவோருக்கான பிரிவின் கீழ் 58.57 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-4, ஐடிஆர்-6 ஆகிய படிவங்கள் வாரியத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டன. அதன்படி 7.28 கோடி ஐடிஆர்களில் அதிகபட்சமாக ஐடிஆர் 1 படிவத்தில் 45.77 சதவீதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 43.82 சதவீத ஐடிஆர்கள் இணையவாயிலாகவும், மீதமுள்ளவை நேரடி முறை மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இணையம் மூலம் வருமான வரிக் கணக்கு தளத்தை ஜூலை 31-ஆம் தேதி மட்டும் 3.2 கோடி பேர் அணுகியுள்ளனர். இணையம் மூலமாக 6.21 கோடி ஐடிஆர்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 5.81 கோடிக்கும் மேற்பட்ட ஐடிஆர்கள் ஆதாரை அடிப்படையாகக் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளன.

தாக்கல் செய்தோர் எண்ணிக்கை

Tags :
CBDTIncome Tax Returnsministry of financetax
Advertisement
Next Article