Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
10:04 AM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement

ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜுவின் உறவினர்கள் வீடுகள் உட்பட 8 இடங்களில் வரிமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Advertisement

வேலம்குச்சா வெங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு, தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அண்மையில் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக மாநில அரசால் நியமிக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' மற்றும் 'சங்கராந்திகி வஸ்துன்னம்' ஆகிய இரு படங்களும் இம்மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இவர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தயாரித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

Tags :
Dil RajuHyderabadIncome Taxraids
Advertisement
Next Article