Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வருமான வரித்துறை அறிவிப்புகள் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும்” - நடிகர் விஜய் சேதுபதி!

“வருமான வரித்துறை அறிவிப்புகள், தகவல்கள், விண்ணப்பங்கள் தமிழிலும் இடம்பெற வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
03:17 PM Jan 29, 2025 IST | Web Editor
Advertisement

மதுரையில் வரி செலுத்துவோர் மைய சேவையை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். வருமான வரித்துறை சார்பில் மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் ஜனவரி 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வரி செலுத்துவோருக்கான மையம் செயல்படுகிறது.

Advertisement

வரி செலுத்துவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த மையம் செயல்படுகிறது. மேலும் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது;

“நான் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். நானும் ஆடிட்டர்ஸ் அலுவலகங்களில் சில காலம் வேலை செய்துள்ளேன். வருமான வரித்துறை குழந்தைகளுக்கு கூட புரியும் வண்ணம் வரி விபரங்களை தெரிவித்து உள்ளது. வருமான வரி குறித்த
அறிவிப்புகள், தகவல்கள், விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தியில் இடம்பெற்றுள்ளன. வருமான வரித்துறை அறிவிப்புகள், தகவல்கள், விண்ணப்பங்கள் தமிழிலும் இடம்பெற வேண்டும்.

தமிழில் இடம்பெற்றால் தான் மக்கள் புரிந்து கொண்டு விண்ணப்பங்கள்
சரியாக பூர்த்தி செய்ய முடியும். இல்லையெனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய,
மக்கள் மற்றவர்களின் உதவிகளை நாட வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்துவது முக்கியமானது. அனைவரும் வரி செலுத்த வேண்டும். அரசிடம் இருந்து நாம் திட்டங்களை கேட்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல வருமான வரி செலுத்துவது முக்கியமானது.

அதிக அளவில் வருமான வரியை முறையாக செலுத்துவோர்களுக்கு வருமான
வரித்துறை எதாவது சலுகை அளிக்க வேண்டும். ஏனென்றால் வருமானம் இல்லாத
காலங்களில் வருமான வரித்துறை அளிக்கும் சலுகைகள் உதவிகரமாக இருக்கும்.
தமிழ்த்தாய் பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

Tags :
actorincome tax departmentTamilVijay sethupathi
Advertisement
Next Article