Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert : அடுத்த 24 மணிநேரம்... சென்னையில் கொட்டி தீர்க்கப்போகும் அதி கனமழை!

01:04 PM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்களிலும், நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiRainrain alertRegional Meteorological Centre
Advertisement
Next Article