Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 24 செ.மீ மழை பதிவு!

04:20 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜன.08) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் சிதம்பரம் 23 செ.மீ., வேளாங்கண்ணி 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ., கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலம் 17 செ.மீ., என மழைப் பதிவாகியுள்ளது.

Tags :
Heavy rainMayiladuthuraiNews7Tamilnews7TamilUpdatessirkaliWeather Update
Advertisement
Next Article