Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!

11:45 AM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், நூறு நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த திட்டம் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கடலூர்,  விழுப்புரம், திருவண்ணாமலை , நாகப்பட்டினம்,  திண்டுக்கல்,  சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்தது.  பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : “தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்த திட்டத்தின் மூலம்,  கிராமங்களில் நில மேம்பாடு,  மழைநீர் சேகரிப்பு,  வறட்சித் தடுப்பு,  பாசனக் கால்வாய்,  சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இத்திட்டத்தின் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது.  மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் 85 சதவீததிற்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.  இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c) ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது.  தற்போது இந்த திட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு நாளுக்கு  ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . இதையடுத்து, அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் ஒரு நாளுக்கு ரூ. 374 ஆக உதியத்தை உயர்த்தியுள்ளனர்.

Tags :
hikemgnregapudhucherryTamilNaduUnionGovernmentWages
Advertisement
Next Article