Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேலத்தில், திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

07:36 AM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை – தோ்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் பிரதானமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சேலம் அக்ரஹாரம் மார்க்கெட் பகுதியில் நடைபயணமாக சென்று மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பின்னர் இன்று மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Tags :
DMKElection2024MK StalinSalem
Advertisement
Next Article