புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை... !!
பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், செயலி பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது.
வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய் தகவல்கள் வேகமாக பரவுகின்றன. இது பல்வேறு நேரங்களில் கலவரம், மோதல்களுக்கு வழிவகுத்து விடுகின்றன.
இதை தடுக்க மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் தகவலைகளை உறுதி செய்ய வாட்ஸ்ஆப் சேனல்ஸில் 'செக் தி ஃபேக்ட்ஸ்' எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படியுங்கள்:விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!
மேலும், பயனர்கள் தங்களுக்கு சந்தேகமான தகவல்களை இதில் பதிவிட்டு உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதற்காக உண்மையான தகவல்களை சோதிக்கும் தனியார் நிறுவனங்களை வாட்ஸ்ஆப் தனது சேனல்ஸில் இணைத்துள்ளது.
அதனை தொடர்ந்து, தவறான தகவல்களைப் பரப்பும் பயனாளர்களுக்கு எதிராக எப்படி புகார் அளிப்பது, தடை செய்வது போன்ற விவரங்களையும் வாட்ஸ்ஆப் ஒரு மாத பிரசாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும், ஒரு நபர் கேள்வி கேட்காவிட்டாலும் பொய், தவறான தகவல்கள் இணையத்தில் பரவிக் கொண்டே தான் இருக்கும் என்றும் இதைத் தடுக்கவே ஒருங்கிணைந்த விழிப்புணர்வு ஒரு மாதத்துக்கு நடத்தப்படுகிறது என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.