Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

05:22 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த 2023-ம் ஆண்டு 170 பேர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதன் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை, சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த ராமமூர்த்தி (27) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அண்ணா சாலை ஓரமாக நடத்து சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மூலச்சாவடைந்து உயிரிழந்தார்.

அவரது பெற்றோர்கள் தனது மகனின் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம், இதயம்,தோல் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து அவர் உடலுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

”2022-ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். அந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலேயே அதிக உடல் உறுப்பு தானம் செய்துள்ளது தமிழ்நாடு என்று விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இவ்வளவு உடல் உறுப்பு தானம் என்பது கடந்த 2008-க்கு பிறகு இதுதான் முதல் முறை. இதன்மூலம் 11.4 சதவீதம் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டு தொடங்கி 13 நாட்களில் 11 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

உடல் உறுப்பு தானம் வழங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வேண்டும் என்றும் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நுரையீரல் 64, சிறுநீரகம் 438, இதயம் 76, நுரையீரல் மற்றும் இதயம் 65, கைகள் 27, நுரையீரல் மற்றும் சிறுநீரகம் 40 மொத்தம் 7037 பேர் உடல் உறுப்பு வேண்டுமென காத்துக் கொண்டிருக்கின்றனர்

உடல் உறுப்பு சரியான நேரத்தில் கிடைத்ததன் மூலம் கடந்த ஆண்டு 170 பேர் மூலம் 1000 பேர் பயன்பெற்றுள்ளனர். ராமமூர்த்தியின் உடல் உறுப்பினால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இவருடைய கல்லீரல் தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கும், ஒரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும், இன்னொரு சிறுநீரகம் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவருக்கும், இதயம் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவருக்கும், அவருடைய தோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags :
Chennaima subramaniyanNews7Tamilnews7TamilUpdatesorgan donationorgans
Advertisement
Next Article