Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Rajinikanth உடல்நிலை | அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!

10:47 AM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் இப்பொது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மருத்துவர்கள் அறிவுறுத்தல் பேரிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை தரப்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மா.சுப்பிரமணியன் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை, திட்டமிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அறுவை சிகிச்சை?

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து தனி அறைக்கு மாற்றம் ; எவ்வித அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags :
Rajini kanth𓃵Super Star
Advertisement
Next Article