"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" - முதலமைச்சர் #MKStalin பதிவு
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இரும்பின் தொன்மை என்ற நூலை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதேபோல் மதுரையில் கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அமையவுள்ள அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையும் படியுங்கள் : டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுகிறதா? – #Annamalai சொன்ன தகவல்!
மேலும், கீழடி இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை காண்பதற்கு வாய்ப்புள்ளோர் நேரில் வர வேண்டும் என்றும், மற்றவர்கள் நேரலையில் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொல்லியல் துறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.