Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

🛑முக்கிய அறிவிப்பு: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம் போல் இயங்கும்!

09:56 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் நாளை (ஜூலை 23) பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை இருமார்க்கங்களிலும் 55 மின்சார ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

“சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை 23) முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02, 2024 வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

 

 

வரும் சனி (ஜூலை 27) மற்றும் ஞாயிறு (ஜூலை 28) அன்று புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படியே ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுகிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
electric trainLocal TrainNews7Tamilnews7TamilUpdatessouthern railwaySuburban Traintrain service
Advertisement
Next Article