Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விரலில் அழியாத மை : 9வருடங்களாக வாக்களிக்க முடியாத பெண் - எங்கே நடந்தது?

08:33 AM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

விரலில் மை அழியாததால் பெண் ஒருவர் கடந்த 9வருடங்களாக வாக்களிக்க முடியாத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 60.96 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.  மறுபுறம் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் நிர்பந்திக்கப்பட்டதால் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தனது வாக்குப்பதிவு செயலியில் வெளியிட்ட தோராயமான புள்ளிவிவரங்களின்படி, மாநில வாரியான வாக்குப்பதிவின் அடிப்படையில், திரிபுரா அதிகபட்ச வாக்குப்பதிவை பெற்றுள்ளது.  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் 13 மக்களவைத் தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஜம்மு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் எட்டு இடங்கள், திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி, அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி, அசாமில் 5 இடங்கள்,  மேற்கு வங்கத்தில் 3 இடங்கள் மற்றும் பீகாரில் ஐந்து தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராகுல் காந்தி, சசி தரூர், கஜேந்திர சிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 88 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். தேர்தல் ஆணையத்தின் தோராயமான புள்ளிவிவரங்களின்படி, கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதியான வயநாடு 69.51% வாக்குகளைப் பதிவு செய்தது.  சசி தரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 63.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.


இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மக்களவைத் தொகுதிக்குட்புட்ட பகுதியில்  விரலில் மை அழியாததால் 8 வருடத்திற்கு மேலாக வாக்களிக்காமல் இருந்திருக்கிறார் ஒரு பெண். கேரள மாநிலம் சோரனூரைச் சார்ந்த குருவாயூரப்பன் நகரில் வசிப்பவர் உஷா(62). இவர் கடந்த 2016ம் ஆண்டு கேரள மாநில சட்டசபைத் தேர்தலின்போது வாக்களித்தார். அப்போது அவரது விரலில் மை வைக்கப்பட்டது. இது இன்று வரை அழியாத நிலையில் உள்ளதால் அவரால் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அவர் மை அழியாததால் வாக்களிக்க செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்திகள் பல ஊடகங்களில் வெளியான நிலையிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. விரலில் மை அழியாததால் 9வருடங்களாக தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ElectionElection2024Immortal inkINKKeralawoman
Advertisement
Next Article