Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“உடனே சக்சஸ்ஃபுல் ஆகணும்” - கவனம் பெறும் ‘டிராகன்’ டிரெய்லர்!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
08:13 PM Feb 10, 2025 IST | Web Editor
Advertisement

‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் திரைப்படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர்,  அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் இப்படத்திலிருந்து ‘ரைஸ் ஆப் தி டிராகன்’,  ‘வழித்துணையே’,  ‘ஏன் டி விட்டுப்போன’ ஆகிய  பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

Advertisement

இப்படம் வருகிற காதலர் தினத்தின்று (பிப்.14) வெளியாகும் என பொங்கல் வாழ்த்து போஸ்டரில் படக்குழு தெரிவித்திருந்தது. தொடர்ந்து அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானதால்,  டிராகன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இன்ஜினியர் மாணவராக வரும் பிரதீப் ரங்கநாதன், ஆசிரியர்களுக்கு அடங்காமல் சரிவர படிக்காமல் அரியர் வைத்து ஃபெயிலியர் மாணவராக இடம்பெற்றுள்ளார். இது அவரின் வாழ்க்கையில் பிரதிபலிக்க அதிலிருந்து அவர் மீண்டு வர  “உடனே சக்சஸ்ஃபுல் ஆகணும்” என்ற வசனங்களை பேசி  அதற்கான முயற்சிகளை எடுப்பதுபோல்  காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Tags :
ரிலீஸ்பிரதீப்டிராகன்Anupama ParameswaranAshwath MarimuthuDragon movieKayadu LoharPradeep Ranganathan
Advertisement
Next Article