Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எனது முடியை வைத்தே எனக்கான விக்கினை தயாரிக்க இருக்கிறேன்" - புற்றுநோயால் தலைமுடியை வெட்டிய பாலிவுட் நடிகை!

03:37 PM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

பாலிவுட் நடிகை ஹினா கான் தனது தலைமுடியை வெட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  

Advertisement

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான்.  இவர் இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பல சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.  அதனுடன் அவர் பிக்பாஸ் சீசன் 11 இல் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.  மேலும அன்லாக், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா, ஹேக்கட் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு 3ம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.  தொடர்ந்து, நடிகை சமந்தா உள்பட பலர் இவருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகை ஹினா கான் தனது தலைமுடியை வெட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.  இந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, "பெண்கள் இந்த நோயுடன் போராடுவதன் கடினம் எனக்கு தெரியும். நமக்கு தலைமுடிதான் மகுடம் போன்றது. யாரும் அதை கழட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் போராட்டம் கொடியதாக இருக்கும் சமயத்தில் உங்களது தலைமுடியை இழக்கவே செய்ய வேண்டும். நான் இந்தப் போராட்டத்தில் வெற்றியடைய விரும்புகிறேன்.

அதனால் எனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பில்கூட நான் வெற்றியடைய நினைக்கிறேன். முடியை இழக்கும் முன்பே அதனை வெட்டிவிட முடிவடுத்தேன்.  உண்மையான மகுடம் என்பது எனது தன்னம்பிக்கையும், வலிமையும், என்னை நானே காதலிப்பதும்தான். இந்தக் கால கட்டத்தில் எனது சொந்த முடியை வைத்தே எனக்கான விக்கினை (செயற்கை முடி)  தயாரிக்க இருக்கிறேன்.

தலைமுடி, புருவ முடிகள் மீண்டும் வளரும். வடுகள் மறையும். ஆனால் எனது தன்னம்பிக்கை மட்டுமே முழுமையானது, மாறாதது. எனது பயணத்தை நான் வீடியோவாக பதிவு செய்கிறேன். எனது இந்த அனுபவம் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும் எனவும், இதிலிருந்து மீண்டு வர உற்சாகத்தை அளிக்குமெனவும் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Actress Hina Khancancerhaircuthina khanViral
Advertisement
Next Article