Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ இணையத்தில் வைரலாகும் #Ilaiyaraaja லண்டன் to பாரிஸ்… பயண வீடியோ...

08:31 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா இசைக் கச்சேரிக்காக லண்டனிலிருந்து பாரிஸ் செல்லும் விடியோவைப் பகிர்ந்த நிலையில், அது தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் இதில் நாயகனக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கான திரைக்கதை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார்.

இந்தப் படத்திற்காக இயக்குநர் அடிக்கடி இளையராஜாவைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, இளையராஜாவின் ட்ரூலி லிவ் இன் கான்செஃப்ட் இசை நிகழ்ச்சி (truly live in concept) சென்னை, லண்டன், பாரிஸில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக, செப். 8 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் சுரிச் (zurich) நகரில் நிகழ்கிறது.

இந்த நிலையில், லண்டனிலிருந்து ரயிலில் பாரிஸ் சென்ற விடியோவை, ‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ பாடலுடன் இளையராஜா பகிர்ந்துள்ளார். இந்த காணொலியை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
composerIlaiyaraajaLondonLyricistMusiciannews7 tamilParisPlayback Singertruly live in conceptzurich
Advertisement
Next Article