Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இளைய தளபதியோட பார்ட்டி பன்ன ரெடியா"... நாளை மறுநாள் வெளியாகிறது #GOAT திரைப்படத்தின் 4-ஆவது பாடல்!

08:06 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

கோட் திரைப்படத்தின் 4-ஆவது பாடல் நாளை மறுநாள் (ஆக.31) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-ஆவது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், ட்ரெய்லரை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

தொடர்ந்து சமீபத்தில், கோட் புரமோஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு பேசியபோது, “கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரை வாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என தெரிவித்தார். இந்த நிலையில், கோட் திரைப்படத்தின் 4-ஆவது பாடல் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் (ஆக.31) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
actor vijayFourth Singlegoatthalapathy vijayThe Greatest of All Timevijay
Advertisement
Next Article