தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் ஆய்வு!
தென்காசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 7-ம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு முன்னர் காசி விஸ்வநாதர் கோயிலில் பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை எனக்கூறி மூன்று நபர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட பிறகே கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 3-ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேக விழா நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பு மீதான சீராய்வு மனு மறுநாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு வழங்கியும், கோயிலின் உறுதி தன்மை குறித்தும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டவைகள் குறித்தும் ஆய்வு நடத்தி ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு அறிக்கை சமர்ப்பணம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தவல்லி தலைமையிலான குழுவினர் மற்றும் ஐஐடி
குழுவினர் கோயிலின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.