சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!
கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் ஒருபுறம் அறுவடை செய்யபட்ட நெற்பயிர்கள் எல்லாம் முளைத்து கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம் இரண்டு லட்சம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
இது திமுக அரசின் மெத்தனப்போக்கு. குறிப்பாக பருவமழைக்கு முன்பாக கடைமடை பகுதி வரை உள்ள வாய்கால்கள், ஏரிகளை தூர்வாரி நீர் வெளியேறும் நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். விளம்பரத்திற்கு கூட அதை செய்யவில்லை. இந்த மழையால் தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நெல் முழுவதுமாக சேதமடைந்திருக்கிறது. ஆறரை லட்சம் நெல் கொள்முதல் செய்திருக்க வேண்டும்.
40 சதவீதம் தான் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்திருக்கிறார்கள். அறுபது சதவீதம் கொள்முதல் செய்ய வில்லை. இது முழுக்க முழுக்க திமுக அரசின் தோல்வி. கொள்முதல் செய்யவும் தயாராக இல்லை, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யவில்லை. வெறும் விளம்பரத்தை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. வேளாண்துறை அமைச்சர் எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். உணவு துறை அமைச்சர் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.
விவசாயிகள் எல்லாம் தற்கொலை செய்துக் கொள்ளும் சூழ்நிலையில் கோபத்துடன் அழுது கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் நிச்சயமாக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஏன் இன்னும் தயங்கி கொண்டிருக்கிறார். இந்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லி ஆக வேண்டும். திருமாவளவன், வைகோ ஏன் முதலமைச்சரிடம் கேட்கவில்லை, ஏன் அழுத்தம் தரவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்பது தெரிந்தும் திருமாவளவன் ஏன் இன்னும் கேட்கவில்லை.. கூட்டணிக்காகவா? ஓட்டுக்காகவா? தேர்தலுக்காகவா?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தெரிந்து கொள்ள விரும்பவில்லை என கூறும் முதலமைச்சரை எங்காவது பார்த்திருக்கிறார்களா? தமிழ்நாட்டில் பாருங்கள்.. சமூக நீதி பற்றி அக்கறை இல்லாத முதலமைச்சருக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். அத்திகடவு அவினாசி திட்டம் தன்னை பொருத்தவரை தோல்வியடைந்திருக்கிறது. பாண்டியாறு, பொன்னம்பலாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த நான்கரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின், நீர் மேலாண்மைக்கு, நீர் பாசான திட்டங்களுக்கு, ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. சாதியை பற்றி பேசினால் மட்டும் போதாது. இருக்கின்ற ஏற்றதாழ்வுகளை அகற்ற வேண்டும் என்றால் பின்தங்கிய சமுதாயங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வழங்க வேண்டும். சாதி ஒழிய வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது.
சாதியால் வந்த வேற்றுமைகளை போக்குவதற்கு சினிமா பார்த்தால் போக்கிவிட முடியுமா? சாதி ஒழிய வேண்டும் என வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? மேடையில் பேசினால் ஒழிந்துவிடுமா? படிப்பு, வேலை வாய்ப்பு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.