Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்'' - பூபேஷ் பகேல்

04:57 PM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சித்துள்ளார். 

Advertisement

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடந்தது.  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து  அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  சத்தீஸ்கர் மாநில முதல்வர்  பூபேஷ் பகேல் செய்தியானளர்களிடம் கூறியதாவது,  "பிரதமர் மோடி சத்தீஸ்கருக்கு வந்து என்மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறு சுமத்திக் கொண்டிருக்கிறார்.  முதலில் அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்த  தயங்குகிறார் என பதில் சொல்லவேண்டும்.'' என்றார்.

 

 

இதையும் படியுங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சீமான்! – உடல் நலம் குறித்து விசாரித்தார்!

மேலும் ''அவர் மிகவும் பொறுப்பான பதவியில் இருப்பதால், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.  மகாதேவ் செயலிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.  ஆனால்,  பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களைக் கூறி வருகிறார்.  மிகப்பெரிய பொய்யர் என்று தேடினால் மோடியின் முகம்தான் வரும்'' என கூறனார்.

''அப்படி பொய் கூறியும் அவர்களால் எதிர்க்க முடியாதவர்களை அமலாக்கத்துறையை வைத்து முடக்குவர்.  அவர்களால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.  ஆனால் சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று நன்றாகத் தெரியும். மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை உள்ளது." என்று தெரிவித்தார்.

Tags :
Bhupesh BagelChhattisgarhChhattisgarh chief ministerElectionIndiaindia prime ministermodiNarendra modinews7 tamilNews7 Tamil Updatesprime minister
Advertisement
Next Article