Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்" - கமல்ஹாசன் பேட்டி!

எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.
09:32 AM Jul 24, 2025 IST | Web Editor
எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் அத்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், "செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

Advertisement

உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் இன்று உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும், கடமையையும் நான் செய்ய உள்ளேன்.

பெருமையோடு தான் சொல்லிக் கொள்கிறேன். எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது. சில விஷயங்கள் இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவது போல இங்கு பேசக்கூடாது. எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
actorAirportChennaiKamal haasanmakkalneethimaiyamPoliticianPressMeet
Advertisement
Next Article