Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” - மத்திய அரசுக்கு சீமான் சவால்!

என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
05:30 PM Feb 25, 2025 IST | Web Editor
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம்
தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

“மொழி குறித்த புரிதல் பாஜவிற்கு கிடையாது. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் மும்மொழிக் கொள்கை தீவிரமாகும்போது திமுக அரசு அதை எதிர்ப்பது போல நாடகமாடுகிறது. உணவு, உடை, மொழி என்பது தனிமனிதனின் விருப்பம். புதிய கல்விக்கொள்கையை
ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியை கூட கேட்டு பெற முடியாமல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு என்ன பயன்?.

நாம் தமிழர் கட்சி கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். கட்சியில் இருந்து
நிர்வாகிகள் வெளியேறுவது சொந்த விருப்பம். யார் கையிலும், காலிலும் விழுந்து
தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை. எந்த இலை சத்தமில்லாமல் உதிர்ந்துள்ளது?. கட்சியிலிருந்து விலகுபவர்கள் எதையாவது சொல்லிவிட்டு தான் செல்வார்கள்.

என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள். உழைக்கும் ஏழை மக்கள் தான் அரசு மருத்துவமனைக்கும், குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்குகின்றனர். இதன் மூலம் ஏழை மக்களின் வாக்குகளை பறிக்கும் முயற்சி தானே தவிர, மக்களுக்கான செயல் திட்டம் இல்லை. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இப்போது தான் நோய்கள் கண்ணுக்கு தெரிகிறதா?.

பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை, அவர் பேசியதை நான் எடுத்து அதை பேசுகிறேன். அவரை பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை, கொஞ்சம் வேலை இருப்பதால் சிறிய இடைவேளை கொடுத்துள்ளேன். அமைதியாக இல்லை என்றால் முழுவதுமாக பேச ஆரம்பித்து விடுவேன். நான் இல்லாத போது என் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்கள். நான் இருக்கும் போது வீசி இருந்தால் தெரிந்திருக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தாங்கள் தொடங்கி செயல்படுத்தி வருவதாகவும் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தாரிக்கா சல்மான் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் அப்சியா நஸ்ரின் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்

Tags :
Central GovthindiNTKSeeman
Advertisement
Next Article