விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் இந்தியாவையே மறந்துவிடுவார் - சாஹித் அஃப்ரிடி பேட்டி!
சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் விளையாட விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் எங்களின் அன்பைப் பார்த்து இந்தியாவையே மறந்துவிடுவார் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
“மினி உலக கோப்பை” என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் நடப்பதால், பாகிஸ்தான் அணி கட்டாயம் விளையாடும். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தவிர்த்து டாப் 7 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. இது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அறிவித்த அட்டவனையில் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ல் தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. அதன்படி முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது. லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது. மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சாஹித் அஃப்ரிடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
“ நான் இந்திய அணியை வரவேற்கிறேன். பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் கிடைத்தது . அதேபோல 2005-06 இந்தியா பாகிஸ்தான் வந்தபோது, அனைத்து இந்திய வீரர்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.