Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

03:19 PM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 29) நடைபெற்றது.  அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டம் முடிந்து பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி வரை ஏன்
காத்திருக்க வேண்டும். வாக்கு பெட்டியை இன்றே வையுங்கள், வாக்கு செலுத்துகின்றோம் என்ற அளவிற்கு மக்களிடம் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் இருக்கிறது. அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான வேலைகளை செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளோம்.

ஏப்ரல் 12-ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.  ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு,  மறுநாள் 12-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டால் அன்றைய தேதியில் பொதுத்தேர்வு இருக்காது”

இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Tags :
Anbil MaheshDMKholidayMayiladuthuraiNews7Tamilnews7TamilUpdatespublic examsRamadanTamilNadu
Advertisement
Next Article