"ராஜா ஒருத்தர் இருந்தா போதும்... இங்க நா இருக்கே" - மிரட்டும் ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் டிரெய்லர்!
சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
பொங்கல் ரேஸில் இருந்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கவுள்ளன. அந்த வகையில், சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இதில் சிபி சத்யராஜ் உடன் ராஜ் அய்யப்பா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.‘ டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் சிபி சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பேருந்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளியை தேடும் பணியில் சிபி சத்யராஜ் ஈடுபட்டுள்ளார். இதனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.