Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!” - முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!

11:49 AM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொறுப்பில் வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன் மாணிக்கவேல் பேசியதாவது:

ஆன்மிகம் அதிகமானால் குற்றங்கள் குறையும். வீடுகளில் அமைதி நிலவும். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மூலம் அரசு 28 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.  உண்டியலில் எத்தனையோ லட்சம் ரூபாய் வந்தால் கூட அதெல்லாம் சொற்ப காசுகள் தான்.  கோயில்களில் பணிபுரியும் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட அரசு ஊதியம் வழங்கவில்லை.

இந்து அறநிலையத்துறைக்கு ஒரு சொத்து கூட இல்லை,  எல்லாம் சைவ வைணவ கோயில் சொத்துக்கள்.  4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இந்து அறநிலை துறைக்கு உள்ளதாக தவறான தகவல்களை அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.  அரசை பொறுத்தவரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்து கோயில்களை பராமரிப்பதில்லை.

இந்து அறநிலைத்துறை ஊழியர்கள்,  அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது கோயில்களின் சேவகர்களாக கருதப்படுவார்கள்.  கோயில் திருப்பணியின் போது ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் பெறப்படுகிறது.  கோயில் புனரமைப்பு என்ற பெயரில் கோயில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அளிக்கப்படுகின்றன.  இதனால் கோயில் திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை மாநில தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.  அப்படி அவர்கள் செய்வதன் மூலம் கோயில்களின் பழமையான தொன்மை பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையில் இதே நிலைமை நீடித்தால் வரும் 15 ஆண்டுகளில் 26 ஆயிரம் கோயில்களில் பராமரிக்க அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும். 2012 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்க நியூயார்க் நகரில் இருந்து 2662 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் மதிப்பு ரூ.1,020 கோடி கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சிலைகளை மத்திய அரசு மூலம் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தூங்காமல் விழித்து கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை அந்த பதவியில் போடக்கூடாது. இந்த பிரிவுக்கு வருபவர்கள் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும்.  ஆர்வத்துடன் பணியாற்றும் அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும்.

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் இருந்து வேலை பார்த்தால் இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன். விளம்பரத்துக்காக எதுவும் வேண்டாம் நானும் அதை செய்யவில்லை.

இவ்வாறு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.

Tags :
AllegiationIdolnews7 tamilNews7 Tamil UpdatesPK SekarBabuPonn ManickavelTN GovtTN Police
Advertisement
Next Article