Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”மின் கட்டணம் கட்டலையா.., இணைப்பு துண்டிக்கப்படும்” - இப்டின்னு SMS வந்தா நம்பாதிங்க மக்களே..!

02:02 PM Oct 31, 2023 IST | Web Editor
Advertisement

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

சிலநாட்களாக மின் கட்டணம் கட்டவில்லை என்றால மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி அனுப்பி மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த குருஞ்செய்தியை நம்பி பலரும் மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்கிற  குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண நிலைப்பாட்டை  சரி பார்க்கவும். இதன் பின்னர் அவசரகதியில் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்.

மேலும் அவர்கள் பணத்தை அனுப்புமாறு கூறி அனுப்பும் இணைய லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்.  இதற்கு பதிலாக உடனடியாக 1930 என்கிற எண்ணை அழைத்து புகார் அளிக்கவும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், உங்களுக்குத் தெரிந்த  உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இந்தத் தகவலை பகிரவும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஏனென்றால் இதுபோன்று ஒரு மோசடி மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம். அல்லது @tncybercrimeoff என்ற டிவிட்டர் பக்கத்திலும் புகார்அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
EBFraud SMSHackersSMS AlertTNEBTNEB Complaint cell
Advertisement
Next Article