Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”குடிநீர் வழங்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவேன்” - அதிமுக முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் வீடியோ வைரல்!

01:29 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

”குடிநீர் வழங்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் இன்று வழக்கம் போல் காலையில்
சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் அருகே உள்ள இருந்திராபட்டியில், குடிநீர் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

இப்புகார் வந்ததை தொடர்ந்து இருந்திராப்பட்டியில் உள்ள நாடக மேடையில் அமர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் விஜயபாஸ்கர்.  அப்போது நாளை தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு இதுவரை குடிநீர் சென்றடையவில்லை.  இன்று மாலைக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விட வேண்டும். இல்லையெனில் நானே வீதியில் இறங்கி போராடுவேன் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறினார்.

 மேலும் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அதிகாரியிடம் மக்கள் நிலை குறித்து விவரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags :
IrundirapattiPudukottaiTWADVijayabaskar
Advertisement
Next Article