Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

" 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் " - தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி

05:33 PM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

”70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார்”  என தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி எழுபியுள்ளார்.

Advertisement

மேலும்  ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேது  நடைபெற்றது. அதேபோல மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நவம்பர் 7அன்று நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து 70தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.  தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது..

” கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என பாஜக கேட்கிறது.. ?.  70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்றால், மோடி எப்படி பள்ளிக்குச் சென்றார்?. மோடி பள்ளிக்கூடம் சென்று இருந்தால் அந்த பள்ளிக்கூடம் காங்கிரஸால் கட்டப்பட்டது.  அதேபோல மோடி கல்லூரிக்கு போனாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவர் படித்ததாக சொல்லும் Political Science-களுக்கான சான்றிதழ் காங்கிரஸ் கொடுத்த கணினியில் அச்சிடப்பட்டது.” என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
campaignElectionpriyanka gandhiPriyanka Gandhi Vadra
Advertisement
Next Article