ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடு
10-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. 20 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து. நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘சி’ பிரிவில் வங்காளதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து 12-ந்தேதி டெல்லியில் நமீபியாவுடன் மோதுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.