டெஸ்ட் தரவரிசை | முதலிடத்தை தக்க வைத்த பும்ரா... 29 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் இடம் பிடித்த போலண்ட்!
டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆண்கள் டெஸ்ட் போட்டிகளிக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் பேட் கம்மின்ஸ் மற்றும் 3-வது இடத்தில் ரபாடா உள்ளனர்.
இதில், ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி.வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் அசத்தலாக பந்து வீசினார். இவர் 5 இன்னிங்ஸில் விராட் கோலியை 4 முறை ஆட்டமிழக்க செய்தார். கடைசி ஆட்டத்தில் 10 விக்கேட் எடுத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
இதன் மூலம் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9 ஆவது இடத்திற்க்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி பெளலர்கள் தரவரிசை:
1.ஜஸ்பிரீத் பும்ரா - 908 புள்ளிகள்
2.பாட் கம்மின்ஸ் - 841 புள்ளிகள்
3.ககிசோ ரபாடா - 837 புள்ளிகள்
4.ஜோஷ் ஹேசில்வுட் - 835 புள்ளிகள்
5.மார்க்கோ ஜான்செந் - 735 புள்ளிகள்