Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவரது உயர் கல்விக்கு துணை நிற்பேன்” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

03:49 PM May 06, 2024 IST | Web Editor
Advertisement

மாணவர் சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும்,  அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களது வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 பேர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.

விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது.

இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.  இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியோடு எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாணவர் சின்னத்துரையை தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன். “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க””

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
12th ResultAnbil MaheshDMKNews7Tamilnews7TamilUpdatesResult 2024ResultsTamilNadutn schools
Advertisement
Next Article