Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. டீசர் வெளியிட்ட ரஜினிகாந்த்!

11:51 AM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி, லால் சலாம் படத்தோடு பொங்கலில் சந்திப்பதாக வீடியோ வெளியிட்டு டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார். அவர் பகிர்ந்த ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதனைதொடர்ந்து ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகி 675 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

இன்று இந்தியாவில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடிவரும் நிலையில், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் வருகின்ற பொங்கல் பண்டிகையன்று லால் சலாம் படத்தோடு உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். மொய்தீன் பாய் குதாபீஸ் என்று கூறி தனது ஸ்டைலில் வணக்கம் தெரிவித்தது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த வீடியோ பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியை கொடுத்துள்ளது.

Tags :
#LalSalaamAishwaryaa RajinikanthCinema updatesjailerLal salaam TeaserLyca ProductionsMoideen BhaiNews7Tamilnews7TamilUpdatesRajinikanthsuperStarSuperstar RajinikanthThalaivar
Advertisement
Next Article