Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி” - நடிகர் விஷால் பேட்டி!

03:17 PM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக நடிகர் விஷால் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

"வரும் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன்.  இந்த கட்சியுடன் கூட்டணி,  இந்த கட்சியுடன் இத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்க கூடாது.  மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும்.  ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம்.

இதையும் படியுங்கள் : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!

கிராமப்புறங்களில் மக்களுக்கான நலதிட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. திமுக,  அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.  எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது.  மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால்,  என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.  மேலும், புதிதாக கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டோம் என்றார்.

மேலும்,  நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் விஷால் கூறியதாவது :  நடிகர் சங்க பொதுக்குழுவில் மட்டும் தான் முடிவெடுக்க முடியும்.  முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் அவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்"

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

Tags :
actorElectionPoliticsSalemTamilCinemaTamilNaduvishal
Advertisement
Next Article