Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” - நயினார் நாகேந்திரன் பேட்டி!

ஆட்சி மாற்றத்திற்காக தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
03:25 PM Sep 11, 2025 IST | Web Editor
ஆட்சி மாற்றத்திற்காக தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

இமானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று பாஜக சார்பில் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார.

Advertisement

அப்போது  முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருக்கும் வரை தோல்வி தான் என டிடிவி தினகரன் பேசியது குறித்த கேள்விக்கு அவர்,

”உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை முதலமைச்சராக சொல்கிறாரோ ஏற்றுக்கொள்வோம் பிரச்சாரம் செய்வோம் என சொன்னார். தேர்தல் நேர பிரச்னைகள் 4 அரை ஆண்டு கால பிரச்னைகளை வைத்து மக்கள் தான் வெற்றி தோல்வியை முடிவு செய்வார்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு விட்டு உங்களுடன் ஸ்டாலின் நடந்த நிகழ்வு எங்காவது நடந்ததுண்டா. இதுவரை தமிழ்நாடு பார்த்ததுண்டா.?. நாலரை வருடங்களாக திமுக எங்கே சென்றது. 4அரை வருடங்களாக மக்களோடு திமுக இல்லை. இப்போது தான் மக்களோடு வருகிறீர்கள் போல. தலைமைச் செயலாளர் அனைத்து செயலாளர்களுக்கும் எல்லா அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். இதுபோன்ற நிலைமை எப்போதாவது இருந்ததுண்டா..?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக பாமக பிரச்னைக்கு பாஜகவே காரணம் என செல்வப்பெருந்தகை பேசியது குறித்த கேள்விக்கு அவர், ”காங்கிரஸ் கட்சி உறவாடி கெடுக்காதா.? காங்கிரஸ் கட்சி 90 முறை எல்லா மாநிலங்களிலும் ஆட்சியை கலைத்துள்ளார்கள். இதுதான் காங்கிரசின் கலாச்சாரம். பாஜகவின் கலாச்சாரம் அது கிடையாது. எங்கள் கலாச்சாரம் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகலாம். எல்லோருக்கும் மந்திரிகள் கொடுத்திருக்கிறோம். உறவாடி கெடுப்பது காங்கிரஸ் கட்சி தான். திமுக கூட்டணியில் எல்லோரும் இருந்தாலும் கூட எங்களுடைய பாஜக கட்சி பெரிய கட்சி. அதிமுக பெரிய கட்சி நாங்கள் வெற்றி பெறுவோம். நான் ஓபிஎஸ் உடன் போனில் பேசி உள்ளேன். எங்கள் உறவு நன்றாக உள்ளது. டிடிவி தினகரனுடன் பேச வேண்டுமென்றாலும் அவருடனும் பேசுவேன். ஆட்சி மாற்றத்திற்காக யார் யாரிடம் பேச வேண்டுமோ தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன். அதிமுக பெரிய கட்சி. எங்கள் கூட்டணியின் தலைவர் ஈபிஎஸ். ஆதனால் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நிச்சயமாக எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும்” என்று தெரிவித்தார்.

Tags :
ADMKlatestNewsNainarNagendranOPSttv
Advertisement
Next Article