“நான் நாட்டுக்காக உயிரையும் தருவேன்!” - நியூசிலாந்து நாடாளுமன்றதில் பழங்குடியின மொழியில் ஒலித்த முழக்கம்!
நியூசிலாந்து நாடாளுமன்றதில் பழங்குடியின மொழியில் ஒலித்த 21 வயதே ஆன இளம் உறுப்பினரின் முழக்கம் சமூக வலைதள பக்கங்கங்களில் வைரல் ஆகி வருகிறது.
2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டின் 170 ஆண்டுகால வரலாற்றில் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான 21 வயதே நிரம்பிய ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க் என்பவர் தனது கன்னிப்பேச்சை பதவு செய்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 தலைமுறைகளுக்கு மேல் அரசியல் இருந்து வருகிறது மைபி-கிளார்க்கின் குடும்பம். இந்நிலையில், நியூசிலாந்தில் உள்ள பூர்வீக சமூகங்களின் உரிமைகளுக்காக போராடி வரும் மைபி-கிளார்க், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நனையா மஹுதா என்பவரை தோற்கடித்து நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், நீயூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சை பதிவு செய்த மைபி-கிளார்க், தமது நாட்டின் ஆதிக்குடிகளான மாவோரி பழங்குடியின மொழியில் தனது கருத்தை பதிவு செய்தார். அதில் நான் நாட்டுக்காக உயிரையும் தருவேன்... அதே நேரத்தில் உங்களுக்காக வாழவும் செய்வேன் எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பழங்குடியிட மொழியில் நாடாளுமன்றத்தில் அவர் முழங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிலையில் அவர் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.