”திருமணம் குறித்த நல்ல செய்தியை இன்று பிற்பகல் அறிவிக்கிறேன்”- நடிகர் விஷால் பேட்டி!
தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தாயாரிப்பாளரான விஷாலுக்கு இன்று 48-வது பிறந்தநாள் இதனைத் தொடர்ந்து தனது பிறந்தநாளை சென்னையில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”சினிமாவில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக இருப்பது உலக சாதனை. இதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்படும். 9 ஆண்டுகால உழைப்பில் உருவாகி வரும் நடிகர் சங்க புது கட்டடம் இன்னும் 2 மாதத்தில் திறக்கப்படும். நான் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவனாக, விஜய் ரசிகராக அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து சொல்கிறேன். சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும் அவர் முயற்சி வெற்றி பெறணும்”
என்று தெரிவித்தார்.
மேலும் திருமணத்தை பற்றி பேசிய அவர், ”என் திருமணம் குறித்த நல்ல செய்தியை இன்று 12.30 மணிக்கு அறிவிக்கிறேன்” தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மற்று நடிகை சாய் தன்சிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடக்க இருப்பதாக தகவல் கசியும் நிலையில் விஷால் இதனை தெரிவித்துள்ளார்.