Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"டி20 உலகக் கோப்பையையும் கையில் ஏந்துவேன்" - ரிங்கு சிங் பேட்டி!

09:17 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது போலவே டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் என டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டில் நேற்று (மே 26) நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், ஐபிஎல் கோப்பையைப் போல டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

"நான் முதலில் நொய்டாவுக்கு செல்ல உள்ளேன். அதன்பின் உலகக் கோப்பைத் தொடருக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளேன். நான் உலகக் கோப்பையை கையிலேந்துவதையும் நீங்கள் பார்ப்பீர்கள். வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கௌதம் கம்பீர் வந்தவுடன் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
championsCricketIPLIPL2024kkrKolkata Knight RidersRingu Singh
Advertisement
Next Article