Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஆவேசம் போல் ஒரு கதை சொன்னேன்...ஆனால்’ - அஜித் படம் கைவிடப்பட்டது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!

04:56 PM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

அஜித் படத்தை இயக்கவிருந்து பின் அந்த படம் கைவிட்டு போனது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசியுள்ளார்

Advertisement

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்துடனான படம் கைவிடப்பட்டதற்கு காரணம் என்னவென்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

துணிவு படத்திற்கு பின் அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருந்தது.  இதைத் தொடர்ந்து சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இப்படம் கைவிடப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசியுள்ளார். 

https://twitter.com/CinemaWithAB/status/1862419219846951248

அஜித் உடனான படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்ததாவது;

“அஜித் சார் என்னிடம் பேசியபோது நான் அதிகம் படங்கள் பார்க்கமாட்டேன். ஆனால் நானும் ரவுடிதான் படத்தை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அந்த மாதிரியான ஒரு கதை இருந்தால் நாம் சேர்ந்து பணியாற்றலாம் என அஜித் என்னிடம் சொன்னார். அவர் சொன்னது போலவே துணிவு படத்திற்கு பின் மறுபடியும் எனக்கு ஃபோன் செய்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் இருக்க வேண்டும் என்பது தான் அஜித் சாரின் ஆசை. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஒரு படம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பல ரூல்ஸ் இருந்தன. ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுத தொடங்கும் போதே அந்த ரூல்ஸை எல்லாம் உடைத்து தான் நான் எழுதுவேன். ஆனால் படம் ஏன் காமெடியாக இருக்கிற்து. எமோஷன் , மெசேஜ் எல்லாம் வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் படம் பார்த்தபோது அஜித் சாருக்கு நான் சொன்ன கதை மாதிரியே அது இருந்தது. அந்த மாதிரியான ஒரு படத்தில் அஜித் சார் நடித்திருந்தால் அது ரொம்ப புதுசாக இருந்திருக்கும்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்

Tags :
AaveshamactorAjithkumarCine Updatesvignesh sivan
Advertisement
Next Article