Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” - பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி குறித்து தோனி கருத்து!

12:40 PM May 04, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, பெத்தேல் அதிரடி காட்டினர்.

Advertisement

இவர்கள் விக்கெட் சரியவே அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது பெங்களூரு. இதனால் அடுத்த இரண்டு ஓவர்களிலும் சேர்த்து 184 ரன்களை சேர்க்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால் கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் ரோமாரியோ ஷெப்பார்ட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிரனா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 ரன்கள் விளாசி இரு ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 213 ரன்கள் சேர்த்தார். இந்த இரண்டு ஓவர்கள் ஆட்டத்தையே மாற்றி அமைத்தன.

இதனால் சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரசீத் களமிறங்கினர். ஷேக் ரசீத் 14 ரன்களில் ஆட்டமிழக்க ஆயுஷ் தொடர்ந்து விளையாடி வந்தார். ரசீத்தை தொடர்ந்து களமிறங்கிய சாம் கரணும் ஆட்டமிழக்க, நான்காவதாக களமிறங்கிய ஜடேஜா மற்றும் ஆயுஷ் இணை போட்டியை வெற்றிப் பாதையை நோக்கி கொன்று சென்ற நிலையில், ஆயுஷ் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரேவிஸ் முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ அவுட் என நடுவர் கூறியதால் வெளியேறினார். இங்கிடி வீசிய பந்தில் அவுட் என கள நடுவர் கூற, 2 ரன்கள் ஓடிய பிறகே ரிவியூ கேட்டார் பிரேவிஸ். ஆனால் ரிவியூ கேட்கும் காலக்கெடு முடிந்ததாக கூறி, அவுட்-ஐ நடுவர் உறுதி செய்தார். ரீப்ளேவில், பந்து லெக் ஸ்டெம்ப்பை மிஸ் செய்தது தெளிவாக தெரிந்தது.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய தோனி 12 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார் ஷிவம் துபே. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது, யாஷ் தயால் பந்துவீசினார். இம்பாக்ட் வீரராக வந்த ஷிவம் துபே 4வது பந்தில் சிக்ஸர் விளாசவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது, 4வது பந்து ஃபுல்டாஸாக வந்ததால் நோபாலாகவும் மாறியது. இதனால் துபே ப்ரீஹி்ட்டில் மற்றொரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்துவிடுவார் என்று நினைத்த நேரத்தில் ப்ரீஹிட்டில் துபே ஒரு ரன் அடித்தார்.

அதன்பின் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தயால் யார்கராக பந்துவீசவே துபே ஒரு ரன்னும், கடைசிபந்திலும் தயால் யார்கர் விளாச ஜடேஜா ஒரு ரன்னும் எடுக்கவே, ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

போட்டிக்கு பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி,

“நான் களத்தில் இருந்தபோது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஷாட்களை பெரிய ஷாட்களாக மாற்றியிருந்தால் அழுத்தத்தைக் குறைத்திருக்கலாம் என உணர்கிறேன். ஆதலால், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் அருமையாக பேட் செய்தார், நாங்கள் எப்படி பந்துவீசினாலும் அடித்தார். அதிகமான யார்கர்களை வீச இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.

யார்கர்களை வீசமுடியாவிட்டால் அது ஃபுல்டாஸாகி பேட்டர்களுக்கு வாய்ப்பாகிவிடும். பதிரானா பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, பவுன்ஸர் வீசுகிறார், யார்கர் இல்லை. பெரும்பாலான பேட்டர்கள் பேடில் ஸ்கூப் ஷாட் அடித்து பழகவில்லை, தற்போதுதான் பயிற்சி எடுக்கிறார்கள். பெரும்பாலும் ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு பேட்டர்கள் செல்வதில்லை. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் பின்தங்கியிருந்தோம். ஆனால், இன்று பேட்டிங் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags :
CskIPL 2025MS DhoniRCB
Advertisement
Next Article